History

The Temple is a place of worship. Reverence is a supernal form of worship.

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்  வரலாறு 

திருக்கோவில் அமைவது திருவருட் செயல், நாம் யாரும் நினைத்து  ஒரு கோவிலை அமைக்க முடியாது. கோவிலை அமைப்பதற்கு ஒருவரின்  அல்லது பலரின் மூதாதையர் செய்த பூர்வ புண்ணிய பலனே. அவர்களை அந்தக் கைங்கரித்திற்குப் பயன்படுத்த வைக்கிறது.இதற்கு சான்றாக சிவயோகம் விதிவிலக்கன்று.

1977 ஆம் ஆண்டு  யாழ்ப்பாணத்தில் குளப்பிட்டியில் பொன்னுத்துரை என்ற பெரியார் எனக்குரிய சப்தரிஷி நாடி (காண்டம் ) வாசித்த பொழுது குல தெய்வத்திற்குக் கர்பக கிரகம் அமைக்கும் பலன் இருப்பதாக கூறியிருந்தார்.

1987 ஆம் ஆண்டு இலண்டன் வந்த பொழுது இங்குள்ள திருக்கோவில்கள் புலம் பெயர்ந்து வந்த மக்களின் தேவையில் அக்கறை காட்டாத நிலையும். அவற்றின் வருவாய்  தாய்நாட்டில் அல்லலுறும் எமது மக்களுக்கு உதவவில்லை என்றும் அறிந்து. நாம் ஒரு திருக்கோவில் அமைத்து இக்குறைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் முளையிட்ட்து .

உயர்வாசற்குண்று முருகன் கோவிலில் இணைத்து செயற்பட்ட அனுபவவும். இலண்டன் தமிழ் நிலையத்தில் ஏற்ப்பட்ட  அனுபவவும்.ஒரு திருக்கோவில்கள்  அமைத்து.திருக்கோவில்கள், அறக்கட்டளைகள் உப்படி அமைய வேண்டும்.நிரவகிக்கப்பட வேண்டும். அவை எப்படி மக்களின் விடிவுக்காக செயற்பட வேண்டும் என்பதை முன்மாதிரியாக நடத்தி காட்ட வேண்டும் என்பதை முன்மாதிரியாக 
நடத்தி காட்ட வேண்டும் என்ற சிந்தனை 1995 ஆம்  ஆண்டின்  நடுப்பகுதியில் ஏற்பட்டது .

இளமை தொட்டே சட்டம் சம்பந்தமான விடயங்களில் ஆர்வமும், அவற்றை புரிந்து கொள்வதில் ஆற்றலும், இருந்த காரணித்தினால் ஒரு கோவிலை வழிநடத்த ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும், கோவில்கள் தனிப்படடோரின் சொத்தாகவோ,தனியாரின் நிர்வாகத்திலோ இருக்க கூடாது என்ற சிந்தனையால் இந்த அமைப்பு இந்த நாட்டு சட்டத்தின் கீழ் ஒரு அறக்கட்டளையாக வேண்டும் என எண்ணி அதற்கேற்ப ஒரு யாப்பைத் தயாரித்தேன் இந்த அறக்கட்டளைக்கு ஒரு பெயரை வைக்க யோசித்த பொழுது "சிவயோகம் "  என்ற பெயர் மனதிற்பட்ட்து 

"சிவயோகம் "
பெயர் மகிமை 

இந்த காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் காலை 8.00 தொடக்கம் 10 - 11 மணி வரை இலண்டன் சிறிமுருகன்  கோவிலுக்கு சென்று அங்குள்ள விளக்கு மற்றும் பித்தளை பாத்திரங்கள்  போன்றவற்றை நானும்.எனது மனைவியும் துலக்கி கொடுப்பது வழக்கம். ஒரு நாள் நாம் தயாரித்த யாப்பை எடுத்து சென்று எமது மதிப்பிற்குரிய சிவசிறி நாகநாதசிவம் ஐயா அவர்களிடம் எமது நோக்கங்களை எடுத்து கூறி ,அறக்கட்டளைக்கு பெயர் வைக்கும் பொறுப்பு அவருடையது என்றும் அந்த யாப்பை அம்பாள் பாதத்தில் வைத்து ஆசிர்வதித்து தரும்படியும் வேண்டினேன்.அவர் "நீங்கள்  ஒரு பெயரையும் ஜோசிக்கவில்லையா " என்று கேட்டார்